டுவிட்டர் இந்தியா நிர்வாகியை கைது செய்யத் தடை: காணொலி வாயிலாக விசாரணை நடத்த அனுமதி

பெங்களூரு: டுவிட்டர் இந்தியா நிறுவனத்தின் தலைமை அதிகாரியை உத்தரப்பிரதேச காவல்துறையினர் கைது செய்ய கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. காசியாபாத்தில் இஸ்லாமிய பெரியவர் ஒருவர் தாக்கப்பட்ட காட்சிப்பதிவு பலரால் டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் பதிவிடப்பட்டது. அவர் மத ரீதியாக தாக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் தனிப்பட்ட விரோதம் காரணமாகவே அவர் மீது தாக்குதல் நடைபெற்றதாக காவல்துறை விளக்கமளித்தது.

இதையடுத்து மத நல்லிணக்கத்தை குலைத்ததாக கூறி டுவிட்டர் இந்தியா நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் மனிஷ் மகேஸ்வரி உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப்பதியப்பட்டது. மேலும் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு மனிஷ் மகேஸ்வரிக்கு உத்தரபிரதேச காவல்துறை நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடுத்தார். அதில் முதலில் தன்னை சாட்சியாக குறிப்பிட்ட காவல்துறை பின்னர் குற்றவாளியாக மாற்றியதாக தெரிவித்தார். மேலும் காட்சிப்பதிவின் மூலம் விசாரணைக்கு தாம் வருவதாகவும் கூறினார். இதையடுத்து மனிஷ் மகேஸ்வரியை கைது செய்ய தடை விதித்த நீதிமன்றம் காணொலி வாயிலாகவும் அவரிடம் விசாரணை நடத்தவும் அனுமதி அளித்தது.

Related Stories: