'வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு தொடர்பாக ஆலோசித்து நல்ல முடிவு எடுக்கப்படும்'!: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி..!!

சென்னை: வன்னியர் உள்ஒதுக்கீடு தொடர்பாக ஆலோசித்து நல்ல முடிவு எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்துள்ளார். சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பென்னாகரம் தொகுதியின் பாட்டாளி மக்கள் கட்சி எம்.எல்.ஏ. ஜி.கே.மணி பேசினார். 

அப்போது வன்னியர்களுக்கான 10.5 விழுக்காடு உள்ஒதுக்கீட்டை செயல்படுத்த வேண்டும் என அவர் கோரிக்கைவிடுத்தார். இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து கொரோனா தொற்றை குறைக்க இரவு, பகல் பாராமல் கவனம் செலுத்தி வந்ததை குறிப்பிட்டுள்ளார். 

வன்னியர் இடஒதுக்கீடு கோரிக்கை தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனையும், ஆய்வும் நடத்தி நல்ல முடிவு எடுக்கப்படும் என்றும்  முதலமைச்சர் உறுதியளித்தார். பாமக நிறுவனர் ராமதாஸ் தனக்கு எழுதியுள்ள கடிதத்தில், வன்னியர் இடஒதுக்கீட்டுக்கான முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டியுள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார். 

Related Stories: