போடியில் ஆன்லைனில் ஜமாபந்தி-2வது நாளாக நடைபெற்றது

போடி : போடி தாசில்தார் அலுவலகத்தில் சமூகநல பாதுகாப்புத்துறை சப்கலெக்டர் சிவசுப்பிரமணியம் தலைமையில், ஜமாபந்தி ஆன்லைன் முகாம்  நேற்று 2வது நாளாக நடைபெற்றது.

கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு பொதுமக்கள் தங்கள் குறைகளை ஆன்லைன் மூலம் பதிவு செய்து தீர்க்க வேண்டும் என அறிவிப்பு விடுக்கப்பட்டது. இதனால், பட்டா மாறுதல், பெயர் மாற்றம் உள்பட பல விசயங்கள் குறித்து பதிவு செய்தனர்.

இந்த ஜமாபந்தி மக்கள் குறை தீர்ப்பு முகாம் கடந்த 21ம் தேதி துவங்கி 24 வரை நடக்கிறது. இந்நிலையில், நேற்று இரண்டாவது நாளாக போடி மீனாட்சிபுரம், பூதிப்புரம், கோடாங்கிபட்டி, உப்புக்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு மக்களுக்கு ஜமாபந்தி நடந்தது. இன்று மூன்றாவது நாளாக கோடாங்கிபட்டி உள்வட்டத்தில்  டொம்புச்சேரி, கூழையனூர், போடி நகர் மேலசொக்கநாதபுரம், போடி மேற்கு மலை கிராமங்கள் ஆகிய பகுதிகளுக்கு இன்று புகார் மனுக்களுக்கு குறை தீர்க்கப்படுகிறது.

இதில், போடி பிர்க்காக்களைச்  சேர்ந்த போடி தாசில்தார் செந்தில் மற்றும்  ஆர்ஐக்கள், கிராம நிர்வாக அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர். பொதுமக்கள் சிலர் தங்களின் குறைகளை களைய நேரிலும் வந்து மனு கொடுத்தனர்.

Related Stories:

>