ஓய்வு எப்போது? அஸ்வின் விளக்கம்

இந்திய டெஸ்ட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக ரவிச்சந்திரன் அஸ்வின் திகழ்ந்து வருகிறார். இடது கை பேட்ஸ்மேன்களுக்கு மிகப்பெரிய வில்லனாகவும் இவர் இருந்திருக்கிறார். அஸ்வின் 79 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 24. 68 சராசரியுடன் 410 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இதில் 208 விக்கெட்கள் இடது கை பேட்ஸ்மேன்களுடையது. 30 முறை 5 விக்கெட்களையும், 7 முறை 10 விக்கெட்களையும் வீழ்த்தி சமகால டெஸ்ட் ஸ்பின்னர்களில், தலை சிறந்தவராகத் திகழ்கிறார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் “வீரர்கள் அனைத்து நேரங்களிலும் சிறப்பாகச் செயல்பட முடியாது. சில நேரங்களில் சொதப்பும் நிலை ஏற்படும். நானும் பலமுறை சொதப்பியிருக்கிறேன்.

அப்போது பலர் கடுமையாக விமர்சிப்பார்கள். அதை நான் கண்டுகொள்வது கிடையாது. நான் ஒரு சாதாரண மனிதன். மகிழ்ச்சியும், அமைதியும் எப்போதும் இருக்க வேண்டும் என விரும்ப கூடியவன். நான் எப்போது எனது போட்டியை மேம்படுத்தத் தவறுகிறேனோ அப்போது நான் எனது ஓய்வை அறிவித்துவிடுவேன். தற்போது நான் சிறப்பாக விளையாடி வருகிறேன். அதைப்பற்றி யோசிக்க விரும்பவில்லை” என்றார்.

Related Stories:

>