கோவையில் டாஸ்மாக் கடைகள் மூடல் எதிரொலி!: வனப்பகுதி வழியாக தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு படையெடுக்கும் மது பிரியர்கள்..!!

கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருப்பதால் கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்ட மதுகுடிப்போர் கேரளாவுக்கு படையெடுத்து வருகின்றனர். தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து இருக்கும் கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் ஊரடங்கில் குறிப்பிட்ட சில தளர்வுகள் மட்டும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. 

இந்த மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மதுகுடிப்போர் கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள மதுபான கடைகளுக்கு படையெடுத்து வருகின்றனர். மேலும் மணிக்கணக்கில் நீண்ட வரிசையில் காத்திருந்து அவர்கள் மதுவை வாங்கி செல்கின்றனர். 

போலீசில் சிக்காமல் இருப்பதற்காக சோதனை சாவடி உள்ள நெடுஞ்சாலையில் பயணிக்காமல் வனப்பகுதியை தமிழ்நாட்டு மதுபிரியர்கள் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. கூட்டம் காரணமாக பாலக்காட்டில், திருவனந்தபுரத்திற்கு நிகராக மதுவிற்பனை நடைபெறுவதாகவும் தினமும் பல லட்ச கணக்கில் மது வியாபாரம் நடைபெறுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Related Stories: