கடலாடி ஊராட்சியில் குடிநீர் பிரச்னையை போக்க ₹10 லட்சத்தில் திறந்தவெளி கிணறு அமைக்கும் பணி தீவிரம்

கலசபாக்கம் : கலசபாக்கம் அடுத்த கடலாடி ஊராட்சியில் குடிநீர் பிரச்னையை சமாளிக்க முதல் கட்டமாக ₹10 லட்சம் மதிப்பீட்டில் திறந்தவெளி கிணறு அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.கலசபாக்கம் அடுத்த கடலாடி ஊராட்சியில் குடிநீர் பிரச்னையை சமாளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென எம்எல்ஏ பெ.சு.தி சரவணனிடம் இப்பகுதி மக்கள் வலியுறுத்தினர். இதையடுத்து குடிநீர் பிரச்னையை சமாளிக்க முதல் கட்டமாக கடலாடி ஊராட்சி மதுரா புதுப்பேட்டை பகுதியில் பொது நிதியிலிருந்து திறந்தவெளிக் கிணறு அமைக்குமாறு ஒன்றியக்குழு தலைவர் அன்பரசி ராஜசேகரனிடம் எம்எல்ஏ அறிவுறுத்தினார். அதன்பேரில் ₹10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு திறந்தவெளிக் கிணறு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

மேலும் கடலாடி ஊராட்சியில் குடிநீர் பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்து உடனடியாக அனைத்து பகுதிகளுக்கும் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளுக்கு எம்எல்ஏ அறிவுரை வழங்கியுள்ளார். பத்து ஆண்டுகள் கோரிக்கை புதுப்பேட்டை பகுதியில் நிறைவேறி உள்ளதால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: