விருதுநகர் வீதிகளில் கழிவுநீரால் `கப்’ மேன்ஹோல்கள் உடைப்பு-விபத்து அபாயம்

விருதுநகர் : விருதுநகர் நகராட்சி பாதளாச்சாக்கடை திட்டம் 2006ல் துவக்கப்பட்டு, 15 ஆண்டுகளாகியும் பல வார்டுகள், தெருக்கள் இணைக்கப்படாமல் முழுமை பெறாமல் உள்ளது.  அத்துடன் நகரின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முறையாக சுத்திகரிப்பு செய்வதில்லை. பல பகுதிகளில் பாதாளச்சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லாமல் கவுசிகா ஆற்றில் விடப்படுகிறது.  

நகரில் மல்லாங்கிணறு ரோடு தலைமை அஞ்சலகம் எதிரில், ஏஏஏ ரோடு, காமராஜர் பைபாஸ் ரோடு, அகமது நகர், வேலுச்சாமி நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் பாதளாச்சாக்கடையில் அடைப்புகள் ஏற்பட்டு மேன்ஹோல்கள் நிரம்பி கழிவுநீர் வெளியேறி வருகிறது. சாலைகளில் ஓடும் கழிவுநீரால் சுகாதாரக்கோடு, துர்நாற்றம் நிலவுகிறது.

நகராட்சியில் பாதாளச்சாக்கடை அடைப்புகளை அகற்ற மூன்று இயந்திரங்கள் வாகனங்கள் மற்றும் ரோபோ இயந்திரம் இருந்தும் முழுமையாக பயன்படுத்தி அடைப்புகளை எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

பாதாளச்சாக்கடை திட்ட குறைபாடுகளை சரிசெய்து, நகரில் அனைத்து பகுதிகளையும் சேர்த்து திட்டத்தை முழுமைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேன்ஹோல்கள் உடைந்தால் உடனே அவற்றை மாற்றிட உரிய நடவடிக்கைகளை நகராட்சி நிர்வாகம் எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories: