மேகதாதுவில் அணை கட்டுவதாக அறிவித்த கர்நாடக முதல்வர் எடியூரப்பா உருவபொம்மை எரிப்பு: விவசாயிகள் போராட்டம்

மன்னார்குடி: மேகதாது அணை கட்டுவதை யாரும் தடுக்க முடியாது என கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோட்டூரில் அவரது உருவ பொம்மையை எரித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 17ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் நேரில் சந்தித்து தமிழக வளர்ச்சி குறித்து பேசினார். மேலும், காவிரியின் குறுக்கே கர்நாடகா மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், அணை  கட்டுமான பணிகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தி கடிதம் அளித்தார்.

இந்நிலையில் கர்நாடக முதல்வர்  எடியூரப்பா, மேகதாது அணை கட்டுவதை யாரும் தடுக்க முடியாது, கட்டியே தீருவேன் என்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் அதற்கான அனுமதி கொடுத்துள்ளதாக கூறியது தமிழக விவசாயிகளிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரது அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அடப்பாறு ஆற்றங்கரையில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் எடியூரப்பா உருவபொம்மையை எரித்து  விவசாயிகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories:

>