யானை கூட்டம் விரட்டியடிப்பு

தேன்கனிக்கோட்டை : கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள நொகனூர் காப்பு காட்டில் 6 யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள், அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியே வந்து அருகில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து தக்காளி, பீன்ஸ், முட்டைகோஸ் உள்ளிட்ட பயிர்களை துவம்சம் செய்வது வாடிக்கையாக உள்ளது.

 இதனால், விவசாயிகள் பீதிக்குள்ளாகியுள்ளனர். இதுகுறித்த தகவலறிந்த தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் பட்டாசு வெடித்து யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியை முடுக்கி விட்டனர். இதனால், நொகனூர் வனப்பகுதியில் முகாமிட்டிருந்த யானைகள், அஞ்செட்டி சாலையை கடந்து மரகட்டா காட்டிற்கு இடம்பெயர்ந்து சென்றனர். அப்போது, அங்கு ஆடு-மாடுகள் மேய்த்து கொண்டிருந்தவர்கள் யானைகள் விளை நிலங்களுக்குள் வராதவாறு சத்தம் போட்டு விரட்டினர்.

Related Stories:

>