டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் முதல் நாள் ஆட்டம் கனமழையால் ரத்து

சவுத்தாம்ப்டன்: இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் முதல் நாள் ஆட்டம், கனமழை காரணமாக கைவிடப்பட்டது. கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏறடுத்தியுள்ள இப்போட்டி, சவுத்தாம்ப்டன் ரோஸ் பவுல் மைதானத்தில் இந்திய நேரப்படி நேற்று பிற்பகல் 3.00 மணிக்கு தொடங்குவதாக இருந்தது.  ஆனால், அங்கு இரவில் இருந்தே கனமழை கொட்டியதால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மழை நின்று ஆட்டம் தொடங்குமா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். தொடர்ந்து பெய்த மழை உணவு இடைவேளைக்குப் பிறகு நின்றாலும், மைதானம் ஈரமாக இருந்ததால் சூப்பர் சாப்பர் இயந்திரங்கள் மூலமாக தண்ணீரை அகற்றும் முயற்சியில் ஸ்டேடிய ஊழியர்கள் ஈடுபட்டனர்.

பின்னர் களத்தை ஆய்வு செய்த நடுவர்கள், முதல் நாள் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவித்தனர். டாஸ் கூட போடப்படாத நிலையில், முதல் நாள் ஆட்டம் ரத்தானது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது. இந்த போட்டிக்கு ஏற்கனவே கூடுதலாக ஒருநாள் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>