1,098 காரட் அளவு கொண்ட உலகின் 3வது மிகப்பெரிய வைரம் கண்டுபிடிப்பு : கொரோனாவால் ஏற்பட்ட இழப்பை சமாளிக்க வைரக்கல் ஏலம்!!

போட்ஸ்வானா : ஆப்ரிக்க நாடான போட்ஸ்வானாவில் உலகின் 3வது மிகப்பெரிய வைரக்கல் கண்டெடுக்கப்பட்டது. 1,095ம் ஆண்டு தென் ஆப்ரிக்காவில் 3,106 காரட் அளவு கொண்ட உலகின் மிகப்பெரிய வைரம் கண்டு பிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 2015ம் ஆண்டு போட்ஸ்வானா நாட்டில் 1,109 அளவிலான இரண்டாவது மிகப்பெரிய வைரம் கண்டு பிடிக்கப்பட்டது. தற்போது அதே போட்ஸ்வானா நாட்டில் 1,098 காரட் அளவுக் கொண்ட உலகின் 3வது மிகப்பெரிய வைரம் கண்டு பிடிக்கப்பட்டது.

73 மில்லி மீட்டர் நீளம் 52 மில்லி மீட்டர் அகலம் 27 மில்லி மீட்டர் தடிமன் கொண்டுள்ள இந்த வைரக்கல் அந்நாட்டு அரசின் டப்ஸ்வானா நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. பல கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த வைரத்தை கொரோனா தொற்று குறைந்த பிறகு ஏலம் விடுவதற்கு அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் கிடைக்கும் பணத்தை கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி இழப்பை சீர் செய்ய போட்ஸ்வானா அரசு திட்டமிட்டுள்ளது.

Related Stories: