சொந்தமாக அமைத்து வரும் விண்வெளி ஆய்வு மையத்துக்கு 3 வீரர்களை அனுப்பியது சீனா

பீஜிங்:  விண்வெளியில் சுற்றி வரும் சர்வதேச விண்வெளி மையத்தை அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யா உள்ளிட்ட 13 நாடுகள் சேர்ந்து அமைத்து பல்வேறு ஆய்வுகளில் ஈடுபட்டு வருகின்றன. இதில், சீனாவும் இடம் பெற்றது.  சமீபத்தில், இந்த விண்வெளி  மையத்துக்கு சீனா தனது விண்வெளி வீரர்களை அனுப்ப, அமெரிக்கா தடை விதித்தது. இதனால், விண்வெளியில் தனது நாட்டுக்கென சொந்தமாக விண்வெளி மையத்தை சீனா அமைத்து வருகிறது. ‘தியாங்காங்’ என பெயரிடப்பட்டுள்ள அது, 450 கிலோ மீட்டர் உயரத்தில் கட்டமைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.இதற்கு தேவையான மூலப் பொருட்களை, ஏற்கனவே சரக்கு விண்கலங்களின் மூலம் சீனா அனுப்பி வைத்துள்ளது. இந்நிலையில், இந்த விண்வெளி நிலையத்தில் 3 மாதங்கள் தங்கி ஆய்வுகள் செய்யவும், விண்வெளி மையத்தை கட்டமைக்கவும், நீ ஹஷெங், லியூ போமிங், டாங் ஹோங்போ என்ற 3 வீரர்களை சீனா நேற்று முதல்முறையாக அனுப்பியது. இவர்களை ஜுகுவான் ஏவுதளத்தில் இருந்து ‘ஷென்ஜோ -12’ என்ற விண்கலம் சுமந்து சென்றது. புறப்பட்ட 6 மணி நேரத்தில் இது, ‘தியாங்காங்’ விண்வெளி நிலையத்தை சென்று அடைந்தது.

Related Stories: