தமிழர்களுக்கு அதிகார பரவல் : தமிழ் தேசிய அமைப்புடனான பேச்சு வார்த்தை திடீர் ரத்து: அதிபர் கோத்தபய அடாவடி

கொழும்பு: இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு அதிகாரப் பரவல் அளிக்கப்பட வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையாக இருந்து வருகிறது. இதை  அமல்படுத்துவதாக இந்தியாவுடன் இலங்கை அரசு உடன்பாடு செய்துளளது. இந்நிலையில், இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்ற கோத்தபய ராஜபக்சே சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், ‘சிறுபான்மை தமிழர்களுக்கு அரசியலில் அதிகாரப் பகிர்வு அளிக்கும் 13வது  அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்யப்படும்,’ என அறிவித்தார். இது தொடர்பாக, தமிழ் தேசிய கூட்டமைப்புடன் கோத்தபய ராஜபக்சே நேற்று முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்த இருந்தார். ஆனால், இந்த பேச்சுவார்த்தை திடீரென ஒத்திவைக்கப்பட்டது. இது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் மூத்த தலைவர் சுமந்திரன் கூறுகையில், ``பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டதற்கு எந்த காரணமும் கூறப்படவில்லை. மேலும், இந்த பேச்சுவார்த்தை மீண்டும் எப்போது நடைபெறும் என்றும் கூறப்படவில்லை,’’ என்றார்.

Related Stories:

>