அமெரிக்காவில் அதிகாரம் படைத்த பெடரல் நீதிபதியாக சரளா வித்யா நியமனம்

வாஷிங்டன்: அமெரிக்காவின் கனெக்டிகட் மாவட்ட நீதிமன்றத்தின் பெடரல் நீதிபதியாக, இந்திய வம்சாவளியை சேர்ந்த சரளா வித்யா நாகலாவை செனட் சபை தேர்வு செய்துள்ளது. இதன் மூலம், அமெரிக்காவில் முதல் முறையாக பெடரல் நீதிபதியாக நியமிக்கப்படும் தெற்காசியாவை சேர்ந்தவர் என்ற பெருமையை சரளா பெற்றுள்ளார். இவர் கடந்த 2017ம் ஆண்டு முதல் கனெக்டிகட் மாவட்ட அட்டார்னி அலுவலகத்தில் முக்கிய குற்றப்பிரிவின் துணை தலைமை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். அதற்கு முன்பு, 2012ம் ஆண்டு முதல், அமெரிக்க அட்டார்னி அலுவலகத்தில் குற்றப் பிரிவு ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வந்தார்.

பெடரல் நீதிபதி பதவி வாழ்நாள் பதவியாகும். பிரதிநிதி மற்றும் செனட் அவையில் பதவி நீக்க தீர்மானம் நிறைவேற்றினால் மட்டுமே பெடரல் நீதிபதியை பதவி நீக்க முடியும். பெடரல் நீதிபதி ஒருவர் அவர் விரும்பும் வரை அப்பணியில் தொடரலாம் என்பது உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அதிகாரங்கள் இப்பதவிக்கு உள்ளன.

Related Stories: