கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு

கோவை: கேரளாவில் கடந்த 3-ம் தேதி தென்மேற்கு பருவமழை துவங்கியது. இதையடுத்து, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. குறிப்பாக, கோவை, நீலகிரி மாவட்டத்தில் பருவமழை பெய்து வருகிறது. இம்மழை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் முதல் சிறுவாணி மலை அடிவாரத்தில் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால், கோவை குற்றாலம் அருவியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. தற்போது, கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் கோவை குற்றாலம் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.

நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து தொடர்பாக வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். கோவை குற்றாலம் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வனப்பகுதியில் இருந்த வறட்சி நீங்கியது. கோவை குற்றாலம் அருவியில் தண்ணீர் கொட்டுவதால், நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

Related Stories:

>