ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட கிருஷ்ணா நதி நீர் தமிழகம் வந்தடைந்தது!: அமைச்சர் நாசர் மலர்தூவி வரவேற்பு..!!

திருவள்ளூர்: ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட கிருஷ்ணா நதி நீர் தமிழகம் வந்தடைந்தது. சென்னை மக்களின் தாகத்தை தீர்க்க தெலுங்கு கங்கை திட்டத்தின் மூலமாக ஆந்திராவில் உள்ள கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நதி நீரை ஆண்டுதோறும் ஆந்திர அரசு 12 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்திற்கு இரண்டு தவணையாக வழங்கி வருகிறது. 

அதன்படி தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் இருமுறை கடிதம் எழுதிய நிலையில்  கண்டலேறு அணையில் இருந்து கடந்த வாரம் 14ம் தேதி வினாடிக்கு 500 கனஅடி நீரை ஆந்திர அரசு திறந்து வைத்தது. அந்த தண்ணீரானது தமிழக எல்லையான ஊத்துக்கூட்டை ஸிரோ பாய்ண்ட்டிற்கு வந்தடைந்தது. அதனை பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சி தலைவர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் மலர்தூவி வரவேற்றனர். 

ஊத்துக்கூட்டை ஸிரோ பாய்ண்ட்டில் இருந்து 26 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பூண்டி சத்யமூர்த்தி நீர்த்தேக்க அணைக்கு கால்வாய் வழியாக இன்று வந்தடைகிறது. சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய பூண்டி அணையில் இருந்து செம்பரம்பாக்கம், புழல் ஏரிக்கு திறந்துவிடப்படுகிறது. 

Related Stories: