திருமண ஊர்வலத்துக்கு முன் மணமகள் ஓட்டம்: நீதிகேட்டு காவல் நிலையத்திற்கு வந்த மணமகன்

போபால்: மத்திய பிரதேசத்தில் திருமண ஊர்வலத்திற்கு முன் மணமகள் மாயமானதால், நீதி கேட்டு மணமகள் காவல் நிலையத்திற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மத்திய பிரதேச மாநிலம் ராம்புராவில் வசிக்கும் ராகேஷ் ஹரியாலி என்பவருக்கு நேற்று முன்தினம் திருமண ஏற்பாடுகள் நடந்தது. முன்னதாக மணமகனும், மணமகளும் ஊர்வலம் செல்வதற்காக மேளம் தாளத்துடன் வரவேற்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று போது, திடீரென மணமகள் மாயமானார். அதிர்ச்சியடைந்த இருவீட்டாரும், மணமகளை திருமண மண்டபம் முழுவதும் தேடினர். ஆனால், மணமகள் எங்குதேடியும் சிக்கவில்லை.

ஊர்வலத்திற்காக வெளியே நின்றிருந்த மணமகனுக்கு மணமகள் மாயமானது குறித்து, அவரது குடும்ப உறுப்பினர்கள் தகவல் கொடுத்தனர். அதிர்ச்சியடைந்த மணமகன், தனது குடும்ப உறுப்பினர்களை அழைத்துக் கொண்டு சியோனி மால்வா காவல் நிலையத்திற்கு வந்தார். போலீசார் விசாரணை நடத்தியதில், ராம்புராவைச் சேர்ந்த ராகேஷ் ஹரியாலின் சகோதரிக்கு கடந்த மே 14ம் தேதி திருமணம் நடந்தது. பின்னர், சகோதரியின் ஏற்பாட்டின் கீழ், தனது கணவர் வீட்டை சேர்ந்த பெண்ணுடன் தனது தம்பியான ராகேஷ் ஹரியாலிக்கு திருமணம் உறுதி செய்யப்பட்டது. அதன்படி, நேற்று முன்தினம் திருமண ஏற்பாடுகள் நடந்தன.

ஊர்வலம் புறப்படும் நிலையில், மணமகள் ஓட்டம் பிடித்துவிட்டார். மணமகனின் சகோதரியின் பேச்சைக் கேட்டு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மணமகளின் விருப்பத்தை கேட்டறிந்தார்களா? என்பது தெரியவில்லை. இருப்பினும், இந்த விவகாரம் மற்றொரு காவல் நிலைய எல்லையை சேர்ந்தது என்பதால், மணமகனை டோலோரியா காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தோம்’ என்றார். அதையடுத்து டோலோரியா காவல் நிலையத்திற்கு சென்று ராகேஷ் ஹரியாலி புகார் அளித்தார். இருந்தும், அவரது திருமணம் நின்றதால், இருவீட்டாரும் கவலையடைந்துள்ளனர்.

Related Stories:

>