புடாபெஸ்ட்டில் (ஹங்கேரி) நடந்த மற்றொரு போட்டியில் போர்ச்சுக்கல் 3-0 என்ற கோல் கணக்கில் ஹங்கேரியை வீழ்த்தி, வெற்றி பெற்றது. இப்போட்டியில் அபாரமாக ஆடிய நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, 2 கோல்களை அடித்து அசத்தினார். நடப்பு யூரோ சாம்பியனான போர்ச்சுக்கலை, இப்போட்டியில் ஹங்கேரி அணி ஆட்டத்தின் 86வது நிமிடம் வரை கோல் போட விடவில்லை. அதுவரை ஹங்கேரியின் வீரர்கள் திறமையாக ஆடினர்.