சில்லி பாயின்ட்...

* இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனைகளுக்கு, ஆண்கள் அணி துணை கேப்டன் அஜிங்க்யா ரகானே பேட்டிங் நுணுக்கங்கள் மற்றும் அனுபவ ஆலோசனைகளை வழங்கினார்.

* உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு 3 போட்டிகள் கொண்ட பைனலை நடத்துவது நடைமுறையில் சாத்தியமில்லாதது என்று ஐசிசி தெரிவித்துள்ளது.

* சிட்சிபாசுக்கு எதிரான பைனலின்போது கேலரியில் இருந்து தன்னை ஊக்குவித்ததுடன் எப்படி ஆட வேண்டும் என உரத்த குரலில் ஆலோசனைகளை கூறியபடி இருந்த சிறுவனுக்கு தனது டென்னிஸ் மட்டையை பரிசளித்து நன்றி தெரிவித்துள்ளார் ஜோகோவிச்.

* கொரோனா தொற்று இல்லாத ‘பயோ பபுள்’ பாதுகாப்பு வளையத்துக்குள் இருப்பது மனரீதியாக சவாலான விஷயம் என்று ஆல் ரவுண்டர் க்ருணல் பாண்டியா கூறியுள்ளார்.

Related Stories:

>