ஆம்ஸ்டெர்டாம்: யூரோ கோப்பை கால்பந்து தொடரின் லீக் சுற்றில் நெதர்லாந்து 3-2 என்ற கோல்கணக்கில் உக்ரைனை நொறுக்கி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. ஆம்ஸ்டெர்டாமில் நேற்று நடந்த சி பிரிவு லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து - உக்ரைன் அணிகள் மோதின. நெதர்லாந்து தொடக்கத்தில் இருந்தே தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டாலும், உக்ரைனின் தடுப்பு அரணை தகர்க்க முடியாமல் திணறியது. இதனால் முதல் பாதியில் இரு அணிகளுமே கோல் ஏதும் போடாமல் சமநிலை வகித்தன.2வது பாதியில் நெதர்லாந்து வீரர்கள் கியோர்ஜினேயோ வைனால்டம் 52வது நிமிடத்திலும், வெலர் வெக்ஹோர்ஸ்ட் 58வது நிமிடத்திலும் அடுத்தடுத்து கோல் அடித்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தனர். தட்டுதடுமாறி ஆடிக்கொண்டிருந்த உக்ரைன் வீரர்களும் புதிய எழுச்சியுடன் பதில் தாக்குதலை தீவிரப்படுத்த ஆட்டத்தில் அனல் பறந்தது.