கார்கள் மோதிய விபத்தில் லேசான காயத்துடன் உயிர்தப்பிய மாஜி முதல்வர்

சண்டிகர்: அரியானா முன்னாள் முதல்வர் சென்ற கார் விபத்தில் சிக்கிய நிலையில், அவர் லேசான காயத்துடன் உயிர்தப்பினார். அரியானா மாநில முன்னாள் முதல்வரும், இந்திய தேசிய லோக் தள கட்சித் தலைவருமான ஓம் பிரகாஷ் சவுதாலா (86), நேற்று காரில் குர்கான் - பாட்லி - ஜாஜ்ஜர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அந்த காரின் முன்பக்க இருக்கையில் டிரைவர் அருகே சவுதாலா அமர்ந்திருந்தார். அப்போது முன்னாள் சென்ற மற்றொரு  காருடன், சவுதாலா சென்ற கார் மோதி விபத்துக்குள்ளானது.

உடனே சவுதாலாவின் கார் ஏர் பேக்குகள் விரிந்துகொண்டன. அதனால், சவுதாலா மற்றும் காரில் இருந்தவர்களுக்கு லேசான காயம் மட்டும் ஏற்பட்டது. ஓம் பிரகாஷ் சவுதாலா தற்போது நலமுடன் இருப்பதாக அவரது கட்சி செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து பூதேரா இன்ஸ்பெக்டர் பிரஹம் பிரகாஷ் விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories:

>