வீட்டில் கைப்பற்றிய ஹார்ட் டிஸ்கில் இருந்து மாணவிகளின் ஏராளமான வீடியோக்கள் சிக்கின: நண்பர்களுக்கு விருந்தாக்கிய வீடியோவும் பறிமுதல்

* பள்ளி கராத்தே மாஸ்டரிடம் சிபிசிஐடி போலீசார் துருவிதுருவி விசாரணை

* சிக்கலில் பத்மா சேஷாத்திரி பள்ளி  நிர்வாகம்

சென்னை: பாலியல் பலத்கார புகாரில் சிக்கி,கைதாகியுள்ள பத்மா சேஷாத்திரி பள்ளி கராத்தே மாஸ்டர் கெபிராஜ் வீட்டில் இருந்த கணினி மற்றும் ஹார்ட் டிஸ்கில், மாணவிகளை மிரட்டி நண்பர்களுடன் உல்லாசமாக இருக்கும் ஏராளமான வீடியோக்கள் சிபிசிஐடி போலீசாரிடம் சிக்கியுள்ளது. இதனால் வீடியோ பதிவுகளை வைத்து 2வது நாளாக நேற்றும் கராத்தே மாஸ்டரிடம் துருவிதுருவி விசாரணை நடத்தப்பட்டது. பத்மா சேஷாத்திரி பள்ளி குழுமத்தின் கீழ் இயங்கி வரும் சென்னை விருகம்பாக்கம் பத்மா சேஷாத்திரி மில்லினியம் பள்ளியின் கராத்தே  மாஸ்டர் கெபிராஜ் மீது மாணவி ஒருவர், அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பாலியல் புகார் அளித்தார்.

இதையடுத்து கெபிராஜ் மீது பாலியல் பலாத்காரம் உட்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், பயிற்சிக்கு வந்த மாணவிகளை தனி அறைக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

இது கெபிராஜின் 3 நண்பர்கள் மூலம் உறுதியானது. இதில் பள்ளி நிர்வாகத்தில் உள்ள சிலருக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் இந்த வழக்கை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், சிபிசிஐடிக்கு விசாரணைக்கு மாற்ற டிஜிபி திரிபாதிக்கு பரிந்துரை செய்தார். அதன்படி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் சிபிசிஐடி டிஜிபி ஷகில் அக்தர் உத்தரவுப்படி, வழக்கின் விசாரணைஅதிகாரி இன்ஸ்பெக்டர் லதா, தனது விசாரணையை தொடங்கி உள்ளார். முதற்கட்டமாக கராத்தே மாஸ்டர் கெபிராஜ்  நண்பர்கள் 3 பேர் அளித்த வாக்குமூலத்தின்படி, கராத்தே மாஸ்டர் கெபிராஜை 2 நாள் காவலில் எடுத்து சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் லதா விசாரணை நடத்தி வருகிறார். முதல் நாள் விசாரணையில் கெபிராஜை சிபிசிஐடி போலீசார் புகார் அளித்த, கேரளா மாணவி மற்றும் பள்ளி மாணவிகளை மிரட்டி பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படும் அண்ணாநகரில் உள்ள தற்காப்பு பயிற்சி மையம், அண்ணாநகரில் உள்ள அவரது வீட்டுக்கு நேரடியாக அழைத்து சென்று விசாரணை நடத்தினர். 3 மணி நேரம் நடந்த விசாரணையில், கெபிராஜ் வீட்டில் இருந்து கணினி, ஹார்ட் டிஸ்க்,பென் டிரைவ் உள்ளிட்ட சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து கெபிராஜ் மனைவியிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். அதைதொடர்ந்து கெபிராஜ் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட மின்னணு சாதனங்களை சிபிசிஐடி போலீசார் ஆய்வு செய்தனர். அதில் பல அதிர்ச்சி தரும் வீடியோக்கள் இருந்தது. 2 நாள் விசாரணையில் கராத்தே மாஸ்டர் கெபிராஜ் அளித்த பதிலை சிபிசிஐடி போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர். கராத்தே மாஸ்டர் கெபிராஜால் பாதிக்கப்பட்டு புகார் அளித்த 20க்கும் மேற்பட்ட மாணவிகளிடம்  சிபிசிஐடி போலீசார் ரகசிய விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். அந்த விசாரணையை தொடர்ந்தே இந்த வழக்கின் அடுத்த கட்ட நகர்வு இருக்கும் என்று  சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். 2 நாள் காவல் முடிந்து கராத்தே  மாஸ்டர் கெபிராஜை சிபிசிஐடி போலீசார் நேற்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.

* பள்ளி நிர்வாகி மகனிடம் விசாரணை?

சிபிசிஐடி போலீசார், கராத்தே மாஸ்டர் கெபிராஜ் வீட்டில் கைப்பற்றிய  வீடியோக்களில் இருக்கும் வாலிபர்கள் பத்மா சேஷாத்திரி பள்ளி நிர்வாகிகள் மகன்கள் தானா என தனியாக விசாரணை நடந்து வருகிறது. கெபிராஜ் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததை  ஒப்பு கொண்டுள்ளதாகவும், பத்மா சேஷாத்திரி பள்ளி நிர்வாகிகள் பிள்ளைகளும் இந்த பாலியல் விவகாரத்தில் சிக்கி இருப்பதாகவும் கெபிராஸ் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. பத்மா சேஷாத்திரி பள்ளியின் முக்கிய நிர்வாகிகள் மகன்கள்சிலர் இருப்பதாக தெரிவந்துள்ளது. அந்த வாலிபர்களின் படத்தை காட்டி உறுதி செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். அதன்பிறகு கெபிராஜ் அளித்த தகவலின் படி பத்மா சேஷாத்திரி பள்ளி நிர்வாகிகள் மகன்கள்  சிலரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி  உள்ளது.

* படம் காட்டி பணம் பறித்தாரா?

கராத்தே மாஸ்டர் பயிற்சிக்கு அதிகாலையில் வரும் பத்மா சேஷாத்திரி பள்ளி மாணவிகளை மிரட்டியும், ஆசை வார்த்தை கூறியும் பாலியல் தொந்தரவு செய்வது போன்ற வீடியோ மற்றும் வெளி மாவட்டங்களில் நடைபெறும் கராத்தே மற்றும் ஜூடோ போட்டிகளின் போது சென்னையில் இருந்து அழைத்து சென்ற மாணவிகளை தனது நண்பர்களுடன் உல்லாசமாக இருந்த வீடியோக்கள் இருந்துள்ளது.அதேநேரம், அந்த வீடியோக்களை வைத்து கெபிராஜ் பள்ளி மாணவிகளை மிரட்டி பணம் ஏதேனும் பறித்துள்ளாரா என்ற  கோணத்திலும் சிபிசிஐடி போலீசார் கராத்தே மாஸ்டர் கெபிராஜிடம் விசாரணை நடத்தினர்.

Related Stories:

>