சில்லி பாயின்ட்...

* இந்திய பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு (26 வயது, மணிப்பூர்), டோக்கியோ ஒலிம்பிக்ஸ் மகளிர் 49 கிலோ எடை பிரிவில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். உலக தரவரிசை புள்ளிகளின் அடிப்படையில் அவர் தகுதி பெற்றுள்ளதை சர்வதேச பளுதூக்குதல் கூட்டமைப்பு நேற்று உறுதி செய்தது.

* தாக்கா பிரிமியர் லீக் டி20 தொடரில் விதிமுறைகளை மீறி நடுவருடன் வாக்குவாதம் செய்ததுடன், ஸ்டம்புகளை காலால் உதைத்து ஒழுங்கீனமாக நடந்துகொண்ட முகமதன் ஸ்போர்ட்டிங் கிளப் அணி கேப்டன் ஷாகிப் அல் ஹசனுக்கு 4 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

* இலங்கை அணியுடன் டி20 தொடரில் மோதவுள்ள இங்கிலாந்து அணியில் ஆல் ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

* இலங்கை சுற்றுப்பயணத்துக்கு முன்பாக தவான் தலைமையிலான இந்திய அணி வீரர்கள் மும்பையில் 2 வார தனிமைப்படுத்தலில் இருப்பார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.

* இங்கிலாந்து அணியுடனான 2வது டெஸ்டில், நியூசி. முதல் இன்னிங்சில் நேற்று 388 ரன் குவித்து ஆல் அவுட்டானது. இதைத் தொடர்ந்து, 85 ரன் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து 2வது இன்னிங்சை தொடங்கியது.

* தென் ஆப்ரிக்க அணியுடன் டேரன் சம்மி தேசிய ஸ்டேடியத்தில் நடக்கும் முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் தோல்வியின் பிடியில் சிக்கியுள்ளது. முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் 97 ரன், தென் ஆப்ரிக்கா 322 ரன் எடுத்தன. வெஸ்ட் இண்டீஸ் 2வது இன்னிங்சில் 51 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து திணறியது.

Related Stories:

>