தமிழகம் 'டெல்லி செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் பயணம் வெற்றியடைய வேண்டும்'!: முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி..!! Jun 12, 2021 கி.மு. ஸ்டாலின் உதயகுமார் மதுரை: வருகின்ற 17ம் தேதி டெல்லி செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பயணம் வெற்றியடைய வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சரும், திருமங்கலம் எம்.எல்.ஏவுமான ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். திருமங்கலத்தை அடுத்த வெள்ளூர் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை உதயகுமார் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வருகின்ற 17ம் தேதி டெல்லி செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பயணம் வெற்றியடைய வேண்டும் என்று கூறியுள்ளார். பிரதமரை சந்திக்கும் போது தடுப்பூசி பற்றாக்குறையை போக்குவது குறித்தும், கிடப்பில் போடப்பட்டுள்ள மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கி போர்க்கால நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும் என்று உதயகுமார் கேட்டுக்கொண்டுள்ளார். தற்போது 98 லட்சம் தடுப்பூசி பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது மகிழ்ச்சியானது, வரவேற்கத்தக்க செய்தி என்றும் உதயகுமார் பெருமிதத்துடன் கூறியுள்ளார். மூன்று நாட்களுக்கு தேவையான தடுப்பூசிகள் கையிருப்பில் இருப்பது வரவேற்கத்தக்கது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வெயிலை எதிர்கொள்ள தொழிலாளர்களுக்கு உரிய வசதிகளை செய்து தருக: தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்குநரகம் அறிவுறுத்தல்
இதுவரை இருந்த பிரதமர்களில் நரேந்திர மோடியைப் போல் யாரும் தரங்கெட்ட செயலில் ஈடுபட்டதில்லை: ஜவாஹிருல்லா தாக்கு
பேரூராட்சியில் ரூ.1.20 லட்சம் பறிமுதல்; செயல்அலுவலர் உள்பட 3 பேர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை இன்று அதிரடி ரெய்டு
புழல் ஒன்றிய அலுவலகத்தில் 9 மணி நேரம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை: கணக்கில் வராத ரூ.1.11 லட்சம் பறிமுதல்
திருவல்லிக்கேணியில் தொடரும் சம்பவங்கள் 10 வயது சிறுமி மாடு முட்டி படுகாயம்: பொதுமக்கள் விரைந்து செயல்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு
தமிழ்நாட்டில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு: தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை!!
இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவர்கள் தேர்தலுக்காக நீலிக் கண்ணீர் வடிப்பதா?..சமூகநீதி குளவிக்கூட்டில் கை வைக்க வேண்டாம்: கி.வீரமணி சாடல்
பூத் ஏஜென்டாக பணியாற்றியதற்கு பணம் தரவில்லை என புகார்; பாஜக மாவட்ட பொதுச்செயலாளருக்கு சொந்த கட்சியினரே கொலை மிரட்டல்: 8 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு
மணல் விற்பனையை ஒழுங்குபடுத்துவது தொடர்பான அரசாணை பின்பற்றப்படுகிறதா?: நிலை அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு
தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெறவுள்ளதால் ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றம்