பீகாரில் கொரோனா பெருந்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் விடுபட்ட 4,000 மரணங்கள்: அதிர்சியின் உச்சியில் மக்கள்

பாட்னா: பீகாரில் கொரோனா பெருந்தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கையில் சுமார் 4,000 இறப்புகள் குறைத்து காட்டப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவால் நேற்று நாடுமுழுவதும் 2,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இன்று திடீரென்று தினசரி உயிரிழப்பு எண்ணிக்கை தீடீரென்ரு தினசரி உயிரிழப்பு எண்ணிக்கை 6,148 என்று ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு பின்னணியில் பீகாரில் கொரோனாவால் உயிரிழந்தவர்களில் விட்டுப்போன 4,000 பேரின் பெயர்கள் சேர்க்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. நேற்றுவரை பீகாரில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,500-க்கும் குறைவு என அம்மாநில அரசு கூறிவந்தது. ஆனால் மீண்டும் ஆய்வு செய்ததில் 3,951 மரங்கள் உயிரிழந்தவர்களின் பட்டியலில் சேர்க்கப்படாமல் இருந்து தெரியவந்தது. இதனால் பீகாரில் முத்த உயிரிழப்பு 9,429-ஆக உயர்ந்துள்ளது.

இந்த கூடுதல் மரணங்கள் 38 மாவட்டங்களிலும் நிகழ்ந்திருக்கின்றது என்றும், ஆனால் எப்போது என்று தெளிவாகவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. பீகாரில் இரண்டாம் அலையில் மட்டும் 8,000 பேர் உயிரிழந்துள்ளார். ஏப்ரல் மாதத்தில் பீகாரில் உயிரிழப்பு எண்ணிக்கை 6 மடங்கு அதிகரித்துள்ளது. பீகாரில் இதுவரை 7,15,179 பிற பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா மரணங்களில் குளறுபடி நிலவிவருகிறது என சர்வதேச ஊடகங்கள் கூறிவரும் நிலையில் பீகாரில் 4,000 மரணங்கள் விடுபட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: