உச்ச நீதிமன்றம் நடவடிக்கை தலைமை நீதிபதி ரமணாவுக்கு கேரள சிறுமி பாராட்டு கடிதம்

புதுடெல்லி:  கேரளமாநிலம், திரிச்சூரை சேர்ந்தவர் லித்வினா ஜோசப். கேந்திரா வித்யாலயா பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணாவிற்கு கடிதம் எழுதி இருக்கிறார். இந்த கடிதத்தில் ‘நான் நாள்தோறும் செய்திதாள்களை படித்து டெல்லி மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் கொரோனா மரணங்கள் நிகழ்வதை கண்டு மிகுந்த கவலை அடைந்தேன். கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் சாமானிய மக்களின் துன்பங்கள் மற்றும் இறப்புக்களில்  உச்ச நீதிமன்றம் தலையிட்டு  தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதை அறிந்து கொண்டேன். உங்களின் மாண்புமிகு நீதிமன்றம் ஆக்சிஜன் விநியோகத்திற்கு உத்தரவிட்டு  ஏராளமான உயிர்களை காப்பாற்றியுள்ளது. உங்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,’ என குறிப்பிட்டுள்ளார். மேலும்,  இதனுடன் நீதிபதி தனது சுத்தியால் கொரோனா வைரசின் தலையில் ஓங்கி அடிப்பது போன்றும், மகாத்மா காந்தியின் படத்தையும் சிறுமி வரைந்து அனுப்பியுள்ளார். சிறுமியின் கடிதத்தை பாராட்டி தலைமை நீதிபதியும்  பதில் எழுதி இருக்கிறார்.

Related Stories: