உலக டெஸ்ட் சாம்பியன் போட்டி: நிலைமையை உணர்ந்து ஆடினால் வெற்றி நிச்சயம்..! யுவராஜ்சிங் சொல்கிறார்

புதுடெல்லி: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஜூன் 18ம் தேதி சவுத்தாம்ப்டனில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. அதன் பிறகு இடைவெளி விட்டு இந்தியா-இங்கிலாந்து அணிகள் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகின்றன. இது ஆகஸ்ட் 4ம் தேதி தொடங்குகிறது.

இந்நிலையில் இந்திய முன்னாள் அதிரடி ஆல்-ரவுண்டர் யுவராஜ்சிங் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: உலகடெஸ்ட்-சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி 3 ஆட்டங்கள் கொண்டதாக இருந்திருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் முதல் டெஸ்டில் தோற்றாலும், அடுத்த இரு டெஸ்டில் சரிவில் இருந்து மீள்வதற்கு வாய்ப்பு கிடைக்கும். நியூசிலாந்து அணி ஏற்கனவே இங்கிலாந்தில் விளையாடி வருவதால் இந்தியாவை விட அவர்களே ஒரு படி மேலே இருப்பார்கள். ரோகித் சர்மா இப்போது டெஸ்ட் போட்டிகளில் அனுபவ வீரராக உள்ளார்.

7 சதங்கள் எடுத்திருக்கிறார், இதில் 4 சதங்களை தொடக்க வீரராக எடுத்துள்ளார். ஆனால் ரோகித் சர்மாவும், சுப்மன் கில்லும் இப்போதுதான் இங்கிலாந்தில் தொடக்கத்தில் இறங்கவிருக்கிறார்கள். அவர்களுக்கு சவால் என்னவென்பது தெரியும். டியூக்ஸ் வகை பந்து ஆரம்பத்திலேயே ஸ்விங் ஆகும் என்பதை அவர்கள் அறிவார்கள். எனவே அங்குள்ள சீதோஷ்ண நிலைக்கு தகுந்தபடி சீக்கிரமாக பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். அதாவது காலையில் ஆடுகளம் வேகப்பந்துக்கு ஒத்துழைக்கும், ஸ்விங் ஆகும். மதியத்துக்கு பிறகு பேட்ஸ்மேன்கள் வேகமாக ரன்கள் சேர்க்கமுடியும். தேனீர் இடைவேளைக்கு பின்னர் பந்து மீண்டும் ஸ்விங் ஆகும். ஒரு பேட்ஸ்மேனாக இந்த விஷயங்களுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொண்டால் சக்சஸாக செயல்பட முடியும். இளம் வீரரானசுப்மன் கில் ஆஸ்திரேலியாவில் நன்றாக ஆடியதை நினைவில் கொண்டு நியூசிலாந்திலும் ஆடவேண்டும். அதற்கான தன்னம்பிக்கையுடன் அவர் ஆடினால் வெற்றி நிச்சயம். இவ்வாறு யுவராஜ் சிங் கூறினார்.

Related Stories: