உத்திரபிரதேச பாஜக தலைவர்களிடையே வலுக்கும் பனிப்போர்?: குஜராத் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியை துணை முதல்வராக்க திட்டம்?

லக்னோ: உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் - பாஜக தேசிய தலைமை இடையிலான பனிப்போர் உச்சத்தை அடைந்துள்ளது. உத்திரபிரதேசம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக பாஜக தேசிய பொதுச்செயலாளர்களுடன் ஜே.பி.நட்டா, பிரதமர் மோடி உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தியுள்ளனர். இந்த நிலையில் உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் - பாஜக தேசிய தலைமை இடையிலான பனிப்போர் உச்சத்தை அடைந்துள்ளது. யோகி ஆதித்யநாத்தின் பிறந்தநாளுக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, அக்கட்சியின் தேசிய தலைவர் நட்டா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவிக்காததை அடுத்து இந்த விவகாரம் விவாத பொருளானது.

உத்திரதேசத்தில் களமிறக்கப்பட்டிருக்கும் குஜராத்தில் பணியாற்றிய முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி அரவிந்த் குமாருக்கு பாஜக தேசிய தலைமை அதிக முக்கியத்துவம் குடுக்க தொடங்கி இருப்பது யோகி ஆதித்யநாத்திற்கு  சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அரவிந்த் குமார்  உத்திரபிரதேச மேலவை உறுப்பினராக்கப்பட்டுள்ள நிலையில் அவர் துணை முதல்வர் ஆக்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த விவாதங்கள் தொடர்ந்து கொண்டிருக்கும் வேளையில், ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் பலர் உத்திரபிரதேசத்தில் முகாமிட்டுள்ளனர். 

உத்திரபிரதேச தலைவர்கள் பலர் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். மாநில ஆளுநர் ஆனந்தி பென்ணையும் முக்கிய தலைவர்கள் சந்தித்து பேசி வருகின்றனர். யோகி ஆதித்யநாத்திற்கு எதிராக தேசிய தலைமை காய் நகர்த்தி வருவதாக கூறப்படும் நிலையில் உத்திரபிரதேச மாநில பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இருந்து பிரதமர் மோடி, அமித்ஷா, நட்டா ஆகியோரின் படங்கள் நீக்கப்பட்டுள்ளன. 

Related Stories: