அமேசான் விற்கும் பிகினி உடையில் கன்னட கொடி: கர்நாடகா எச்சரிக்கை

பெங்களூரு: அமேசானில் கன்னட கொடி, முத்திரையுடன் பிகினி உடை விற்கப்படுவதற்கு கர்நாடகா அரசும், அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.  கர்நாடகாவில் சில நாட்களுக்கு முன்பு கூகுளில் கன்னட மொழியின் தன்மை குறித்து தேடியபோது, அதில் கன்னட மொழி அழகற்ற மொழி என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது. கூகுள் நிறுவனத்தின் தவறான நடைமுறைத்தான் இதற்கு காரணம் என்று பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், கூகுளை கடுமையாக விமர்சித்தனர். இதையடுத்து, அந்த வாசகம் கூகுளில் இருந்து நீக்கப்பட்டது. இந்த அதிருப்தி மக்கள் மத்தியில் இருந்து நீங்காத நிலையில், அமேசான் நிறுவனம் சப்ளை செய்த பெண்களின் நீச்சல் உடையில் (பிகினி) கன்னட கொடி, முத்திரையை பயன்படுத்தி உள்ளது. இது, இந்த உடை சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து கன்னட கலாச்சாரத் துறை அமைச்சர் அரவிந்த் லிம்பாளி நேற்று அளித்த பேட்டியில், ``கர்நாடகா, கன்னட மொழி குறித்த சர்ச்சைகள் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து வெளியாகிறது. சமீபத்தில்தான், கூகுள் நிறுவனம் கன்னட மொழியை இழிவுபடுத்தும் வகையில், சில பதிவுகளை வெளியிட்டு இருந்தது. கடும் எதிர்ப்பை தொடர்ந்து அந்த பதிவு நீக்கப்பட்டது. அமேசான் நிறுவனம் கன்னட கொடி, முத்திரையுடன் பிகினி உடைகளை விற்பது கண்டனத்துக்குரியது. அமேசான் அதை தயாரிக்கவில்லை என்றாலும், அதை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ய முயற்ப்பது மிகவும் தவறு. எனவே, அதன் மீது அரசு சட்ட நடவடிக்கை எடுக்கும்,’’ என்றார்.

Related Stories: