தென் ஆப்ரிக்காவுடன் டெஸ்ட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் அணியில் இளம் வேகம் ஜேடன் சீல்ஸ்

செயின்ட் லூசியா: தென் ஆப்ரிக்காவுடன் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியில் 19 வயது இளம் வேகப் பந்துவீச்சாளர் ஜேடன் சீல்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்  தென் ஆப்ரிக்க அணி 2 டெஸ்ட்,  5 டி 20ல் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட்  ஜூன் 10ம் தேதியும், 2வது டெஸ்ட் ஜூன் 18ம் தேதியும் செயின்ட் லூசியாவில் தொடங்குகிறது.  டி 20 ஆட்டங்கள்  ஜூன்  26, 27, 29,  ஜூலை 1, 3 தேதிகளில் கிரெனடாவில் நடைபெறும். இந்நிலையில்,  வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.  கிரெய்க் பிராத்வெய்ட் தலைமையிலான  17 பேர் கொண்ட அணியில்  டிரினிடாட் அண்டு டுபாகோவை சேர்ந்த இளம் வீரர் ஜேடன் சீல்ஸ் (19 வயது) சேர்க்கப்பட்டுள்ளார்.

இதுவரை ஒரே ஒரு முதல்தர போட்டியில் மட்டுமே விளையாடி உள்ள ஜேடன், தேசிய அணியில் இடம் பிடித்திருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே போலார்டு  தலைமையிலான டி20 அணி அறிவிக்கப்பட்டது. அதில் கிறிஸ் கேல், டுவைன் பிராவோ, ஆந்த்ரே ரஸ்ஸல்,  நிகோலஸ் பூரன்,  ஷிம்ரன் ஹெட்மயர், ஜேசன் ஹோல்டர் என அனுபவ வீரர்கள் பலரும் இடம் பெற்றுள்ளனது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் அணி: கிரெய்க் பிராத்வெய்ட்(கேப்டன்),  ஜெர்மைன் பிளேக்வுட் (துணை கேப்டன்), என்க்ருமா போனர், டேரன்  பிராவோ, ரோஸ்டன் சேஸ், ரகீம் கார்ன்வால், ஜோஷுவா டா சில்வா, ஷனான்  கேப்ரியல், ஜாமர் ஹாமில்டன், ஜேசன் ஹோல்டர், அல்ஜாரி ஜோசப், கைல் மேயர்ஸ், கைரன் பாவெல்,  ரோச், ஜேடன் சீல்ஸ்,  ஜோமல் வாரிகன்.

Related Stories: