லண்டன்: நியூசிலாந்து அணியுடனான முதல் டெஸ்டில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 275 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. நியூசி. வேகம் சவுத்தீ 6 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 378 ரன் குவித்தது. அறிமுக தொடக்க வீரர் கான்வே 200 ரன் விளாசினார். நிகோல்ஸ் 61, லாதம் 23, வேக்னர் 25* ரன் எடுத்தனர். இங்கிலாந்து பந்துவீச்சில் ராபின்சன் 4, மார்க் வுட் 3, ஆண்டர்சன் 2 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 2ம் நாள் ஆட்டம் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 111 ரன் எடுத்திருந்த நிலையில், 3வது நாள் ஆட்டம் கனமழை காரணமாக கைவிடப்பட்டது. பர்ன்ஸ் 59 ரன், கேப்டன் ரூட் 42 ரன்னுடன் நேற்று 4வது நாள் ஆட்டத்தை தொடங்கினர். ரூட் மேற்கொண்டு ரன் ஏதும் எடுக்காமல், ஜேமிசன் வீசிய முதல் பந்திலேயே வெளியேறினார்.