துணை ஜனாதிபதி, ஆர்எஸ்எஸ் தலைவர் வெங்கையா, மோகன் பகவத் டிவிட்டரில் ‘புளு டிக்’ நீக்கம்: பயன்படுத்தப்படாமல் இருந்ததாக விளக்கம்

புதுடெல்லி: சமூக வலைதளமான டிவிட்டர் தளத்தை பயன்படுத்தும் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் பிரபல நிறுவனங்களின்  உண்மை மற்றும் நம்பகத்தன்மையை  உறுதி செய்வதற்கு அடையாளமாக ‘புளு டிக்’ எனப்படும் வசதியை  டிவிட்டர்  வழங்கி வருகிறது. துணை ஜனாதிபதி  வெங்கையா நாயுடு 2 டிவிட்டர் பக்கத்தை பயன்படுத்தி வருகிறார். அவற்றில் ஒன்று அவருடைய தனிப்பட்ட கணக்கு. மற்றொன்று, அலுவலக ரீதியான பயன்பாட்டில் உள்ளது.  இந்நிலையில், வெங்கையாவின் தனிப்பட்ட டிவிட்டர் பக்கத்தில் இருந்த ‘புளு டிக்’ நேற்று  திடீரென நீக்கப்பட்டது. டிவிட்டரின் இந்த நடவடிக்கைக்கு  துணை ஜனாதிபதி  அலுவலகம் கடும் ஆட்சேபனை தெரிவித்தது. இதையடுத்து, உடனடியாக, மீண்டும் அவருடைய கணக்கில், ‘புளூ டிக்’ வசதியை டிவிட்டர் வழங்கியது. இதேபோல், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகத்தின் கணக்கிலும் இந்த ‘புளு டிக்’ நீக்கப்பட்டுள்ளது. பின்னர் அவருக்கும் இந்த வசதி அளிக்கப்பட்டது. பின்னர், அவருக்கும் அந்த டிக் அளிக்கப்பட்டது. நீண்ட நாட்கள் பயன்படுத்தாமல் இருந்ததால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக டிவிட்டர் விளக்கம் அளித்துள்ளது.

Related Stories: