பள்ளிவாசல்களில் பணிபுரியும் உலமாக்கள், பணியாளருக்கு 5 ஆயிரம் நிவாரண நிதி: சிறுபான்மை நலத்துறை அமைச்சரிடம் வலியுறுத்தல்

சென்னை: சிறுபான்மை நலத்துறை மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானை, எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில பொதுச்செயலாளர் அச.உமர் பாரூக், மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.கே.கரீம், விழுப்புரம் மாவட்ட தலைவர் ரபிக் ஆகியோர் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கொரோனா தொற்றால் உயிரிழந்த தமிழக தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும் தமிழக அரசின் நிவாரண உதவித் திட்டத்தை நீட்டிக்க வேண்டும். கொரோனா பரவலைத் தடுக்க அரசின் உத்தரவின்படி கடந்த ஏப்ரல் மாதம் முதல் அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் தமிழகத்திலுள்ள பள்ளிவாசல்களில் பணிபுரியும் உலமாக்கள், பள்ளிவாசல் பணியாளர்கள் கடுமையான பொருளாதார சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர். ஆகவே தமிழக அரசு பள்ளிவாசல்களில் பணிபுரியும் உலமாக்கள், முஅத்தீன்கள் மற்றும் பள்ளிவாசலில் பணிபுரியும்  பணியாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் கொரோனா நிவாரண நிதி உதவி வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories: