மூத்த இயக்குனர் ஜி.என்.ரங்கராஜன் காலமானார்

சென்னை: கமல்ஹாசன் நடித்த மீண்டும் கோகிலா, கல்யாண ராமன், எல்லாம் இன்பமயம், கடல் மீன்கள், மகராசன் மற்றும் முத்து எங்கள் சொத்து, அடுத்தாத்து ஆல்பர்ட், மனக்கணக்கு, மீண்டும் பல்லவி, ராணித்தேனீ உள்பட பல படங்களை இயக்கியவர், மூத்த இயக்குனர் ஜி.என்.ரங்கராஜன் (91). முதுமை காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று காலையில் மாரடைப்பால் காலமானார். இவரது மறைவுக்கு கமல்ஹாசன் உள்பட திரையுலகினர் இரங்கல் தெரிவித்தனர். நேற்று மாலை ஜி.என்.ரங்கராஜனின் இறுதிச்சடங்கு நடந்தது. அவருக்கு மனைவி ஜக்குபாய், மகள் பரமேஸ்வரி, மகன் குமரவேலன் உள்ளனர். நினைத்தாலே இனிக்கும், யுவன் யுவதி, ஹரிதாஸ், வாஹா ஆகிய படங்களை இயக்கியுள்ள ஜி.என்.ஆர்.குமரவேலன், தற்போது சினம் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

Related Stories: