ஊதியக் கோரிக்கைக்காக தன் உயிரையே தியாகம் செய்த டாக்டர் லட்சுமி நரசிம்மனுக்கு ஒரு நியாயம் வேணும்: மருத்துவரின் மனைவி முதல்வருக்கு உருக்கமான கடிதம்

சென்னை: மருத்துவர்களின் போராட்டத்தை முன்னெடுத்து நடத்தி உயிரிழந்த டாக்டர் லட்சுமி நரசிம்மனுக்கு ஒரு நியாயம் வேண்டும் என்று அவருடைய மனைவி அனுராதா முதல்வருக்கு உருக்கமான கடிதம் எழுதியுள்ளார். மருத்துவர்களின் ஊதிய உயர்வை வலியுறுத்தி கடந்த ஆண்டு மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர். அந்த போராட்டத்தை முன்னெடுத்து நடத்திய டாக்டர் லட்சுமி நரசிம்மன் கடந்த ஆண்டு உயிரிழந்தார். இந்நிலையில் அவருடைய மனைவி அனுராதா தற்போது மின்னஞ்சலில் முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார் அதில்: தமிழகத்தில் உள்ள 18 ஆயிரம் அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண் மருத்துவர்களை 400-500 கி.மீ. தொலைவில் இடமாற்றம் செய்தனர். அதை அவரால் தாங்கி கொள்ள முடியவில்லை. இதனால் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை சந்தித்து பெண் மருத்துவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டதை திரும்ப பெற வேண்டும் என்று கூறினார். மேலும் புதுக்கோட்டைக்கு பார்க்க சென்ற போது 13 இடங்களுக்கு அலைய விட்டு பேசுவதற்கு நேரம் தராமல் விமான நிலையத்துக்கு போய் விட்டார். இதனால் அவர் மன உளைச்சலுக்கு ஆளான நிலையில் எங்களை விட்டு போய்விட்டார். அமைச்சர் விஜயபாஸ்கரின் முகத்தை நினைத்து பார்த்தாலே தூக்கம் வருவதில்லை. எனவே எங்கள் கோரிக்கையை நிறைவேற்றி தாருங்கள், அப்போது தான் அந்த உயிர் அமைதியடையும். என் கணவர் லட்சுமி நரசிம்மனுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்.

Related Stories: