குறுவை சாகுபடிக்காக ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையை திறக்க காவிரி பாசன விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை..!!

தஞ்சை: குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையை வரும் 12ம் தேதி திறக்க வேண்டும் என்று  தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சையில் ஆறுகள், குளங்கள், வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக விவசாயிகளுடன் ஆலோசனை கூட்டம் சிறப்பு கண்காணிப்பு அலுவலர் பிரதீப் யாதவ் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்ட விவசாயிகள், தூர்வாரும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். வருகின்ற 12ம் தேதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதனிடையே சிவகங்கை மாவட்டம் கடைமடை பகுதிகளுக்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர். 

பெரியார் பாசன பகுதிகளுக்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ள நிலையில், மாணிக்கம் கால்வாய் மற்றும் மறவமங்கலம் கால்வாய்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என சிவகங்கை மாவட்ட விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு தேவையான தண்ணீர் கிடைக்க வாய்ப்பு இருப்பதால் திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளை மேற்கொள்வதற்கு முனைப்பு காட்டி வருவது குறிப்பிடத்தக்கது. மேட்டூர் அணை திறக்கப்படும் நிலையில் ஆறுகளின் வழியாக தண்ணீர் விரைந்து வயல்வெளிகளுக்கு வந்து சேரும் வகையில் ஆறு மற்றும் வாய்க்கால்களை உடனடியாக தூர்வார வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: