குமரி: கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டது. வழக்கம் போல் கோயிலில் காலை பூஜை நடந்து கொண்டிருந்த போது திடீரென தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. மேற்கூரையில் எரிந்து வரும் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.