பிரிட்டனில் கொரோனா 3ம் அலை பரவல் தொடக்கம்?: இந்தியாவை சேர்ந்த விஞ்ஞானி எச்சரிக்கை..!!

லண்டன்: பிரிட்டனில் கொரோனா 3ம் அலை பரவல் தொடங்கியுள்ளதாக இந்தியாவை பூர்வீகமாக கொண்ட பேராசிரியர்  எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர் ரவி குப்தா. இவர் கேம்பிரிட்ச் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் பிரிட்டன் அரசின் புதிய மற்றும் வளர்ச்சிபெறும் சுவாசம் தொடர்பான வைரஸ் அச்சுறுத்தல் குறித்து ஆலோசனை குழுவின் உறுப்பினராகவும் உள்ளார். இவர் கொரோனா பாதிப்பு குறைந்து வருவது போல தெரிந்தாலும் பி 1617 என்ற புதிய ரக வைரஸ் வேகமாக பரவ வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். எனவே வரும் 21ம் தேதியுடன் ஊரடங்கை தளர்த்திவிட கூடாது என்றும் அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சனை கேட்டுக்கொண்டுள்ளார். 

இதனிடையே ஏப்ரல் 12ம் தேதிக்கு பிறகு பிரிட்டனில் நாள்தோறும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கடந்த 5 நாட்களாக மூன்றாயிரத்திற்கும் அதிகமாக காணப்படுகிறது. தற்போது எண்ணிக்கை மிக குறைவாக காணப்பட்டாலும் அனைத்து அலைகளும் மிக குறைந்த எண்ணிக்கையிலேயே பரவலை தொடங்குகிறது என்பதையும் ரவி குப்தா சுட்டிக்காட்டியுள்ளார். பிரிட்டனில் கொரோனா 3ம் அலைக்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் அவர் எச்சரித்துள்ளார். பெரும்பாலானோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதால் பரவல் தீவிரமாக முன்பை விட கூடுதல் கால அவகாசம் கூட ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

Related Stories: