திருப்பதி கோயிலில் அலிபிரி நடைபாதை ஜூலை 31 வரை மூடல்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் அலிபிரி நடைபாதை ஜூன் 1ம் தேதி முதல் ஜூலை 31ம் தேதி வரை மூடப்பட உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பாதயாத்திரையாக திருப்பதியில் இருந்து திருமலைக்கு ஏராளமான பக்தர்கள் சென்று வருகின்றனர். மேலும், பாதயாத்திரை செல்லும் பாதையான அலிபிரி நடைபாதையில், பல இடங்களில் உள்ள மேற்கூரை பழுதடைந்துள்ளது. இதனை சீரமைத்து புனரமைப்பு பணிகளை விரைவுபடுத்துவதற்காக ஜூன் 1ம் தேதி முதல் ஜூலை 31ம் தேதி வரை பாதயாத்திரை பாதை மூடப்படுகிறது.

இருப்பினும் மலை பாதையில் திருமலைக்கு  செல்ல விரும்பும் பக்தர்கள் சந்திரகிரியில் உள்ள வாரி மெட்டு மலைபாதை வழியாக செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அலிபிரியிலிருந்து வாரி மெட்டுக்கு தேவஸ்தானத்தின் சார்பில் இலவச பேருந்துகள் மூலம் பக்தர்களை அழைத்து செல்ல  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: