பொன்னேரி ஊராட்சியில் காய்ச்சல் பரிசோதனை முகாம்

ஜோலார்பேட்டை :  ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி  ஊராட்சியில் நேற்று ஊராட்சி நிர்வாகம் சார்பில் காய்ச்சல்  பரிசோதனை முகாம் நடைபெற்றது.திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குனர் அருண் உத்தரவின்பேரில் ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி ஊராட்சியில் உள்ள பொன்னேரி,  சின்ன பொன்னேரி, சின்னகவுண்டனூர், முதலைமடுவு, குண்டிமாரியம்மன் வட்டம், ஆரியான் வட்டம் உள்ளிட்ட 19 கிராமங்களில் வசித்து வரும் பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை மற்றும் ஊராட்சி துறை சார்பில் சுகாதார செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், தூய்மை காவலர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் ஆகியோர் நேற்று  அனைத்து வீடுகளுக்கும்   வீடு வீடாக சென்று காய்ச்சல், இருமல் மற்றும் ஆக்சிஜன் ஆகிய பரிசோதனை மேற்கொண்டனர்.

இதனையடுத்து பொன்னேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற காய்ச்சல் முகாமை  ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள்  பிரேம்குமார், சங்கர் மற்றும் மண்டல துணை செயற்பொறியாளர் ராஜேந்திரன் ஆகியோர் பார்வையிட்டனர். மேலும், ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதியிலுள்ள பொதுமக்களுக்கும்  24 பேர் கொண்ட குழு வீடு வீடாக சென்று  காய்ச்சல், இருமல் மற்றும் ஆக்சிஜன்  பரிசோதனை செய்து வருகின்றனர்.

மேலும், ஊராட்சியில் உள்ள அனைத்து பகுதியிலும் ஒட்டுமொத்த தூய்மைப் பணி நடைபெற்று வருவதால், தூய்மை காவலர்கள் பொன்னேரி ஊராட்சி பகுதி முழுவதும் குப்பைகள் கால்வாய்கள் போன்றவற்றை தூய்மை செய்து, கிருமி நாசினி மற்றும் பிளீச்சிங் பவுடர் தெளித்து  தூய்மை பணி மேற்கொண்டனர்.

மேலும் இந்த ஒட்டுமொத்த தூய்மை பணி மற்றும் காய்ச்சல் பரிசோதனை முகாமில் ஊராட்சி செயலாளர் சின்னத்தம்பி மற்றும் சுகாதாரத்துறை ஊராட்சி உள்ளிட்ட துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: