கொரோனாவுக்கு இலக்காகி உலகம் முழுவதும் 1.15 லட்சம் சுகாதார பணியாளர்கள் பலி!: WHO தலைவர் டெட்ரோஸ் அதானம் அதிர்ச்சி தகவல்..!!

ஜெனிவா: உலகம் முழுவதிலும் பரவி இருக்கும் கொரோனா வைரசுக்கு இதுவரை 1 லட்சத்து 15 ஆயிரம் சுகாதார பணியாளர்கள் பலியாகி இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருக்கிறது. சுஸர்லாந்தில் பேசிய WHO தலைவர் டெட்ரோஸ் அதானம், கொரோனாவுக்கு எதிரான போரில் சுகாதார பணியாளர்களின் தியாகம் போற்றத்தக்கது என்றார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவையாற்றும் பணியில் 1 லட்சத்து 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்களின் இன்உயிரை இழந்திருப்பதாக அதானம் குறிப்பிட்டார். கடந்த ஆண்டை ஒப்பிடும் போது 2021ம் ஆண்டு தொற்றின் வேகம் மிக அதிகமாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அதானம் கூறியதாவது, உலகமே சுமார் 18 மாதங்களாக மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் உள்ளது என்று தான் கூற வேண்டும். 

இன்றைய நிலவரப்படி கடந்த 2020ம் ஆண்டை விட தற்போது மிக அதிக அளவில் தொற்று பதிவாகி வருகிறது. கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கையை பார்க்கும் போது, அடுத்த மூன்று வாரங்களுக்குள் கடந்த ஆண்டின் மொத்த எண்ணிக்கையை விட அதிகமாக மாறிவிடும் என அஞ்சுகிறோம் என குறிப்பிட்டார். ஒருசில வளர்த்த நாடுகளை தவிர மற்ற நாடுகளில் கொரோனா வைரஸ் பரவும் வேகத்திற்கு இணையாக தடுப்பூசி நடவடிக்கை நடைபெறவில்லை என்றும் அதானம் தெரிவித்துள்ளார். உலகத்தில் புழக்கத்தில் இருக்கும் தடுப்பூசிகளில் 75 விழுக்காடு தடுப்பூசி மருந்துகளை 10 நாடுகள் மட்டுமே கொள்முதல் செய்து தன்வசப்படுத்தி இருப்பதாக அவர் கூறினார். அளவுக்கு அதிகமாக உள்ள தடுப்பூசிகளை வளர்ந்த நாடுகள் மிக விரைவில் மற்ற நாடுகளுடன் பகிர்ந்துக்கொள்ள வேண்டும் என்றும் WHO தலைவர் வலியுறுத்தியிருக்கிறார். 

Related Stories: