குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே 4 புதிய பெட்டிகளுடன் மலை ரயில் சோதனை ஓட்டம்

குன்னூர்: நீலகிரி மாவட்டம் ஊட்டி-குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் மலை ரயில் நூற்றாண்டு பழமை  வாய்ந்தது. இந்த மலை ரயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுவார்கள். அதனால், ஊட்டி-குன்னூர் இடையே டீசல்  இன்ஜின் மூலமும், குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே பர்னஸ் ஆயில் இன்ஜின் மூலமும் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் 28  பெட்டிகள் உள்ளன.

இந்தநிலையில், நீலகிரி மலை ரயிலுக்காக சென்னை ஐ.சி.எப். தொழிற்சாலையில் புதியதாக 28  பெட்டிகள் தயார் செய்யப்பட்டது. இதில்   மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு சோதனை ஓட்டத்திற்காக 4 பெட்டிகள் கொண்டு வரப்பட்டன. மேட்டுப்பாளையத்தில் இருந்து  வரும்போது, நீர்வீழ்ச்சி மற்றும் இயற்கை காட்சிகளை எளிதாக கண்டு ரசிக்கும் வகையில்,  பெட்டிகளின் இரு பக்கவாட்டிலும்  கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன. ஊட்டி மலை ரயில் பழைய இன்ஜின் மூலம் இழுத்து வரப்பட்டு இந்த பெட்டிகளுடன் நேற்று   சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இன்றும், நாளையும் மீண்டும் சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது.

Related Stories: