தேனி மாவட்ட எல்லையில் கொரோனா பரிசோதனை சாவடி திறப்பு

பெரியகுளம் : தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தேனி மாவட்டத்தில் தினமும் 700 முதல் 800 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். நோய் தொற்றை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் நேற்று தேனி மாவட்ட எல்லையான காட்ரோடு பகுதியில், வெளி மாவட்டங்களில் இருந்து வாகனங்கள் வருபவர்கள் இ-பதிவு மற்றும் இ-சான்று உள்ளிட்டவைகளை வைத்துள்ளனரா என்பதை சரிபார்க்கவும், வாகனங்களில் வருபவர்கள் அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை செய்யவும் கொரோனா தடுப்பு பரிசோதனை சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பரிசோதனை சாவடியை எஸ்பி சாய்சரண் தேஜஸ்வி துவக்கி வைத்து பேசுகையில், ‘‘வெளிமாவட்டங்களிலிருந்து வருபவர்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். பணியில் உள்ள அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும். கைகளை அடிக்கடி கிருமிநாசினி மூலம் சுத்தப்படுத்த வேண்டும்.’’ என்றார். இதில் பெரியகுளம் கோட்டாட்சியர் சினேகா, டிஎஸ்பி முத்துக்குமார், நகராட்சி ஆணையாளர் அசோக்குமார் மற்றும் காவல் ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.

Related Stories: