முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்: விண்ணப்பிக்கும் முறையை எளிதாக்க வேண்டும்: அரசுக்கு எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை

சென்னை:  எஸ்டிபிஐ கட்சி தலைவர் நெல்லை முபாரக்  வெளியிட்ட அறிக்கை: முதல்வரின் காப்பீட்டு திட்டத்தில் இணைய அதற்கான ஆவணங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரில் சென்று அளிக்க வேண்டும் என்கிற விதி உள்ளது.  ஏராளமான பொதுமக்களும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கொரோனா நோயாளிகளும் முதல்வரின் காப்பீடு திட்டத்தில் தங்களை இணைப்பதற்காக காத்திருக்கின்றனர். ஆகவே, தற்போதைய கொரோனா பரவல் சூழலில் காப்பீடு திட்டத்தில் இணைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்ல வேண்டும் என்பதை மாற்றி, விண்ணப்பித்தலை அரசு எளிமைப்படுத்த வேண்டும். இ-சேவை மையங்கள் மூலமாகவோ, அல்லது கொரோனா மருத்துவமனையிலும் இதற்காக அதிகாரியைக் கொண்டு சிறப்பு கவுண்டரை அமைத்தோ முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் முறையை எளிமைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: