லஞ்ச வழக்கில் கைதான ஐபிஎஸ் அதிகாரியின் ஜாமீன் மனு தள்ளுபடி: 4,000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

ஜெய்ப்பூர்: லஞ்ச வழக்கில் கைதான ஐபிஎஸ் அதிகாரி மணீஷ் அகர்வாலின் ஜாமீன் மனுவை ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், அவருக்கு எதிராக 4,000 பக்க குற்றப்பத்திரிகை விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. டெல்லி - மும்பை அதிவேக நெடுஞ்சாலை கட்டுமான நிறுவன பிரதிநிதிகளிடம் லஞ்சம் கோரிய விவகாரத்தில், பாண்டிகுயியைச் சேர்ந்த எஸ்.டி.எம் பிங்கி மீனா, தவுசாவைச் சேர்ந்த எஸ்.டி.எம் புஷ்கர் மிட்டல், ஐபிஎஸ் அதிகாரி மணீஷ் அகர்வால், புரோக்கர் நீரஜ் மீனா ஆகியோர் கடந்த பிப்ரவரி 2ம் தேதி ராஜஸ்தான் மாநில லஞ்ச ஒழிப்பு துறையால் கைது செய்யப்பட்டனர்.

இவ்வழக்கில் ஐ.பி.எஸ் அதிகாரி மணீஷ் அகர்வால், புரோக்கர் நீரஜ் மீனா ஆகியோர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதனால், அவர்கள் அடைக்கப்பட்டனர். இருப்பினும், ஐ.பி.எஸ் அதிகாரி மணீஷ் அகர்வாலின் சகோதரியின் திருமணத்திற்காக அவருக்கு 10 நாட்கள் இடைக்கால ஜாமீன் கிடைத்தது. தொடர்ந்து ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில், முறையான ஜாமீன் கேட்டு மணீஷ் அகர்வால் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ​​மணீஷ் அகர்வாலின் ஜாமீன் மனுவை நிராகரித்தது.

அதேசமயம், புரோக்கர் நீரஜ் மீனாவின் ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்தது. இதற்கிடையே, லஞ்ச ஒழிப்பு துறையின் சார்பில் விசாரணை நீதிமன்றத்தில், 4,000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

Related Stories: