சிட்னி: ஐபிஎல் தொடர் கொரோனா அச்சத்தால் பாதியில் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் வீரரான ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர், நாடு திரும்பி 14 நாள் தனிமைப்படுத்தலில் ஓட்டல் அறையில் உள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் வார்னர், இந்திய திரைப்படங்களின் சீன்களையும், பாடல்களையும் அவர் இன்ஸ்டா ரீல்களாக செய்து பதிவிட்டு வருகிறார். சில தினங்களுக்கு முன் தனுஷ் நடிப்பில் வெளியான ரவுடி பேபி பாடலுக்கு ரீல் செய்து வெளியிட்டது வைரலானது. இந்நிலையில் தெலுங்கு சினிமாவுக்கு தாவி உள்ளார்.