தேர்வு கட்டணம் செலுத்தாத 32 கல்லூரிகள் அங்கீகாரம் ரத்தாகும் அரசியல் அறிவியல் புத்தகத்தில் திமுக கம்யூனிஸ்ட் பற்றி தவறான தகவல்...உயர் கல்வித்துறை அமைச்சர் தகவல்

சென்னை: அரசியல் அறிவியல் புத்தகத்தில் திமுக, கம்யூனிஸ்ட் பற்றிய தகவல்களை  திறந்த வெளி பல்கலைக் கழக புத்தகத்தில் வெளியானது குறித்து துணைவேந்தர்  உள்ளட்ட பாடக் குழுவினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்  என்று உயர்  கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.  தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர்  பொன்முடி, தன் துறையில் மேற்கொண்ட ஆய்வுகள் குறித்து பேட்டி அளித்தார்.  அப்போது அண்ணா பல்கலைக் கழகத்தில் நடந்த முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது  உரிய நடவடிக்ைக எடுக்கப்படும்.  பொறியியல் கல்லூரிகள் செமஸ்டர் தேர்வு கட்டணத்தை, மாணவர்களிடம்  வசூல்  செய்துவிட்டு, அதை பல்கலைக் கழகத்துக்கு செலுத்தலில்லை.

 அந்த  32 கல்லூரிகள் 24ம் தேதிக்குள் தேர்வுக் கட்டணத்தை அண்ணா பல்கலைக் கழகத்துக்கு   செலுத்த வேண்டும். இல்லை என்றால் அந்த கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து  செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.  இது தவிர கல்லூரி மாணவர்களுக்கான  பாடப்புத்தகங்களில் இடதுசாரிகள், திமுக குறித்து கருத்துகள் இடம்  பெற்றுள்ளன. குறிப்பாக எம்ஏ வரலாறு மற்றும் அரசியல் பாடப்பிரிவு  மாணவர்களுக்கு அனுப்பியுள்ள பாடப்புத்தகத்தில், சில  கருத்துகள்  தெரிவிக்கப்பட்டுள்ளன. அதில், ‘‘இந்திய கட்சிகள், குறிப்பாக மதங்களுக்கு  எதிரான திமுக, பொதுவுடைமைக் கட்சிகள் மக்களை வாக்கு வங்கிகளாக மாற்றி  வருகின்றன.  அவை அவர்களை தேசியப் பாதையில் கலந்துவிடாமல்  தடுக்கின்றன. அவை கண்மூடித்தனமாக சிறுபான்மையினரை ஆதரிக்கின்றன.  

முகமதியர் கலவரம்  உருவாக்கி வன்முறை வெடிக்கும் போது அவர்களை கண்டிக்காமல் இருக்கின்றன’’  என்று அந்த பாடத்திட்டத்தில் உள்ளது.  மற்றொரு  புத்தகத்தில், சமூக அறிவியல்  துறை பாடத்தில் எம்ஏ முதலாண்டு பாடப்புத்தகத்தில் 142வது பக்கத்தில்  உள்ளது. இதை எழுதிய துணைத்  தலைவர் மற்றும் துணை வேந்தரையும் அழைத்து  விசாரித்த போது ஒரு பதிலும் இல்லை. ஆகவே  அந்த துறைத் தலைவர்கள், இதை  அனுமதித்த துணை வேந்தர்கள், ஆகியோரை உடனடியாக விசாரித்து இதுற்கு யார்  காரணம் என்பதும் கண்டறிந்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மத்திய  அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கை தமிழகத்துக்குள் வராமல் தடுக்க  நடவடிக்கை எடுக்கப்படும். புதிய கல்விக் கொள்ைகயால் மாநிலங்களின் உரிமைகள்  பறிக்கப்படுகிறது. இதை நாங்கள் எதிர்க்கிறோம் என்று திமுக  தலைவர்  மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே கருத்து தெரிவித்து இருந்தார். அது குறித்து  நாடாளுமன்றத்திலும் திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அது குறித்து  மத்திய அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை. எனவே அது குறித்து  ஆய்வு செய்ய  குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும். அதனால் புதிய கல்விக் கொள்கை  தமிழகத்தில் நுழையாது. கல்லூரிகளுக்கான புதிய  பாடங்கள் தயாரிக்க குழு  அமைக்கப்படும். திறந்த நிலை பல்கலைக் கழக பாடத்திட்டத்தில் உள்ள சில  பாடங்கள் நீக்கப்படும்.

Related Stories: