இஸ்ரேல்-ஹமாஸ் மோதல்: சமரசம் செய்ய பைடன் முயற்சி முரண்டு பிடிக்கும் நெதன்யாகு

ஜெருசலேம்: இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான மோதலை சமரசம் செய்யும் முயற்சியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஈடுபட்டுள்ளார். ஆனால், நோக்கம் நிறைவேறும் வரை தாக்குவோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு  முரண்டுபிடிக்கிறார். இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இடையே கடந்த 10 நாட்களாக கடும் மோதல் நடந்து வருகிறது. இதில் இஸ்ரேல்  ராணுவம், காசாவின் குடியிருப்பு பகுதிகளில் பீரங்கி குண்டுகளை ஏவி தாக்குதல் நடத்துகிறது. இந்த  தாக்குதலில் பெரும்பாலும் குழந்தைகள் பலியாகின்றனர். இதுவரை 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட 250க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். பல குழந்தைகள் கண்முன்னே தாயையும், குடும்பத்தையும் இழந்து பெரும்  மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

இதனால் உலக நாடுகள் இந்த சண்டையை நிறுத்த வலியுறுத்துகின்றன. அமெரிக்காவிலும் கடும் நெருக்கடிகள் எழுந்ததை தொடர்ந்து அதிபர் பைடன், இஸ்ரேலை சமாதனப்படுத்தும் முயற்சியில் இறங்கி உள்ளார். அவர் இஸ்ரேல் பிரதமர்  பெஞ்சமின் நெதன்யாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு காசா முனையில் தாக்குதலை நிறுத்தும் படியும், பெரும்பாலான படைகளை வாபஸ் பெறும் படியும்  கேட்டுக்கொண்டார். இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள நெதன்யாகு, நோக்கம்  நிறைவடையும் வரை காசா மீதான தாக்குதல் தொடரும் என்று அறிவித்துள்ளார். இதே போல, இஸ்ரேல்-ஹமாஸ் தாக்குதல் நிறுத்தப்பட வேண்டுமென ஐநாவும் வலியுறுத்தி உள்ளது.

Related Stories: