சீன விண்கலம் செவ்வாயில் முதல் புகைப்படம்

பீஜிங்: செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஆண்டு ஜூலை மாதம் சீனா அனுப்பிய தியான்வென் விண்கலம் கடந்த 15ம் தேதி செவ்வாயில் வெற்றிகரமாக தரை இறங்கியது. இதன் ஜூராங் ரோவர் செவ்வாயின் பாறை,  நீர் வளம் ஆகியவை குறித்து ஆய்வு செய்ய உள்ளது. இந்நிலையில், ரோவர் கருவி முதல் முறையாக செவ்வாய் கிரகத்தின் புகைப்படங்களை தனது கேமரா மூலம் எடுத்து  பூமிக்கு அனுப்பி வைத்துள்ளது. அந்த புகைப்படங்களை சீன  விண்வெளி மையம் நேற்று வெளியிட்டுள்ளது.

Related Stories: