கேரள நர்ஸ் குடும்பத்தினருக்கு இஸ்ரேல் அதிபர் ஆறுதல்

திருவனந்தபுரம்: இஸ்ரேலில் கொல்லப்பட்ட கேரள நர்ஸ் சவுமியாவின் கணவரிடம் இஸ்ரேல் அதிபர் ரூவன்ரிவ்லின் தொலைபேசியில் அழைத்து ஆறுதல் கூறினார். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கீரிதோடு பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ். இவரது மனைவி சவுமியா. இஸ்ரேலில் நர்சாக பணியாற்றினார். கடந்த சில தினங்களுக்கு முன் ஹமாஸ்  நடத்திய ராக்கெட் தாக்குலில் சவுமியா இறந்தார். அவரது உடல் தனி விமானம் மூலம் கேரளம் கொண்டு வரப்பட்டது. பின்னர் கீரிதோட்டி–்ல் உள்ள சகாயமாதா சர்ச் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இறுதி சடங்கில் இஸ்ரேல் துணை தூதர் உள்பட 2 உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் சவுமியாவின் கணவர் சந்தோஷை இஸ்ரேல் அதிபர் ரூவன்ரிவ்லின் போனில் அழைத்து ஆறுதல் கூறினார். மேலும் இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ஜெனாதன் சட்காவும் பேசினார். தூதரகத்தில் உள்ள கேரள அதிகாரி ஒருவர் அவர்கள் பேசியதை மலையாளத்தில் மொழி பெயர்த்தார். சந்தோசின் குடும்பத்தை இஸ்ரேல் நாடு பாதுகாக்கும் என்று இருவரும் உறுதி அளித்தனர்.

Related Stories: